சமைக்காமல் ரீல்ஸ் போட்டுக்கொண்டிருந்த மனைவியை கொலை செய்த கணவர்!
பெங்களூருவில் உணவு சமைக்காத மனைவி ரீமாவை கொலை செய்து உடலை போர்வைக்குள் மறைத்து வைத்து விட்டு, பீகாருக்கு தப்பி ஓடிய கணவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவின் கும்பல்கோடு நகரை சேர்ந்தவர் தீரஜ் குமார் (24). இவரது மனைவி ரீமா குமாரி. இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ரீமா ரீல்ஸ் போடுவதில் கவனம் செலுத்தி, தீரஜை தவிர்த்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவரும் வழக்கம்போல் சண்டையிட்ட நிலையில், வாக்குவாதம் தீவிரம் அடைந்து, தீரஜ் தனது மனைவி ரீமா குமாரியை முக்காட்டால் கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை ஒரு படுக்கை விரிப்பில் சுற்றிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பீகார் சென்று தீரஜை பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். கொலை குறித்து தீரஜ் குறித்த வாக்குமூலத்தில், “ரீமா அவருக்கு மட்டுமே உணவு தயாரித்துக் கொண்டார், நான் வீட்டிற்குத் திரும்பும்போது எனக்கு உணவு பரிமாறவில்லை. இந்தப் பிரச்சினை காரணமாகவே இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன” எனக் கூறியுள்ளார்.