×

`காதலனும் கைவிட்டுவிட்டாள்; பெற்றோருக்கும் கெட்டப் பெயர்!’- உயிரை மாய்த்த 6 மாத கர்ப்பிணி காதலி

ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த காதலன் கைவிட்டதால் மனமுடைந்த காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் மணப்பாறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றம்). 17 வயதான இவர், உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த ராம்கி (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உமாவிடம் நெருங்கி பழகி வந்ததோடு,
 

ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த காதலன் கைவிட்டதால் மனமுடைந்த காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் மணப்பாறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றம்). 17 வயதான இவர், உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த ராம்கி (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உமாவிடம் நெருங்கி பழகி வந்ததோடு, ஆள் இல்லாத நேரத்தில் உமாவின் வீட்டிற்கு சென்று பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதன விளைவாக உமா 6 மாத கர்ப்பமானார். மகள் கர்ப்பமாக இருக்கும் தகவல் பெற்றோருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, மகளை ராம்கிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு எடுத்தனர். இதையடுத்து, ராம்கி வீட்டிற்கு சென்றனர் உமாவின் பெற்றோர். அப்போது, உங்கள் மகள் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகியுள்ளார். இதனால் உங்க பெண்ணை எங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று ராம்கியின் பெற்றோர் கூறியதோடு, உமாவின் பெற்றோரை அசிங்கமாக பேசியுள்ளனர். இதனால் வேதனையில் உமாவின் பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர். மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் ராம்கி மீது புகார் அளித்தார் உமா. புகாரின் பேரில் போக்ஸோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராம்கி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த மே மாதம் 29 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த உமா மற்றும் அவரது பெற்றோர் மணப்பாறை மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உமாவிடம் மணப்பாறை டிஎஸ்பி பிருந்தா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராம்கியை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி கூறியதையடுத்து போராட்டத்தை உமா கைவிட்டார். அதன்பிறகும், ராம்கி கைது செய்யப்படாதநிலையில் உமா நேற்றிரவு பூச்சி மருந்தை குடித்துவிட்டார். உயிருக்கு போராடிய உமாவை பெற்றோர், அரசு மருத்துவமனையில் சேர்ந்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாவும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்தனர்.

“கடந்த 8ம் தேதி ராம்கிக்கு முன் ஜாமீன் கிடைத்திருக்கிறது. ஒருபக்கம் காதலித்தவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோருக்கும் கெட்டபெயர். வழக்கு பதிவு செய்தும் பணத்தை கொடுத்து போலீஸார் அவனை தப்பிக்க வைத்துவிட்டனர். தற்பொழுது பெயில் கிடைத்துவிட்டது. இனிமேல் நாம் வாழ்ந்து என்ன பயன் என்று உயிரை மாய்த்துக்கொண்டார் உமா” என்கின்றர் பெற்றோர்.

“உமாவின் வழக்கு தொடர்பாக விசாரித்து ராம்கி மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். அதே போல இந்த வழக்கில் மெத்தனமாக இருந்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி” என்கிறார் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா