×

ஆசைவார்த்தை… வீட்டிலேயே உல்லாசம்… 6 மாதம் கர்ப்பகம்!- இளம்பெண்ணை நாசப்படுத்திய வாலிபர்

காதலிப்பதுபோல் நடித்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்து 3 மாதம் கழித்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றம்) 17 வயதான இவர், தனது உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த ராம்கியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக
 

காதலிப்பதுபோல் நடித்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்து 3 மாதம் கழித்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றம்) 17 வயதான இவர், தனது உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த ராம்கியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உமாவிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார் ராம்கி. ஒரு கட்டத்தில் உமாவின் வீட்டிற்கே சென்று அவரிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால், விளைவாக உமா கர்ப்பமானார். இதனை மறைக்க உமாவால் முடியவில்லை. 6 மாதம் கர்ப்பமாக இருந்ததால் இதனை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு காரணம் யார் என்று உமாவிடம் பெற்றோர் கூறியுள்ளனர். உறவினர் ராம்கியை காதலிப்பதாகவும் அவரிடம் நெருங்கி பழகியதாகவும் உமா கூறியுள்ளார். இதையடுத்து, ராம்கிக்கே மகளை திருமணம் செய்து வைக்க உமா பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, ராஜாளிப்பட்டி கிராமத்திற்கு சென்ற உமாவின் பெற்றோர், ராம்கியின் பெற்றோரிடம் நடந்தை கூறியுள்ளதோடு, தங்கள் மகள் தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அப்போது, ராம்கியின் பெற்றோர், திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான பெண்ணை, தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று ராம்கியின் பெற்றோர் கூறியதோடு, உமாவின் பெற்றோரை தரக்குறைவாக பேசி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட உமா மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் ராம்கி மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் ராம்கி மீது போக்ஸோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த மே மாதம் 29 ம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை ராம்கியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உமா, பெற்றோருடன் மணப்பாறை மகளிர் காவல் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். உமா மற்றும் அவரது பெற்றோரிடம் மணப்பாறை டிஎஸ்பி பிருந்தா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராம்கியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை உமா கைவிட்டார். காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணை கைவிட்ட ராம்கி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.