×

இன்ஸ்டாக்ராமில் வந்த பெண்கள் -வலை வீசிய வாலிபர்-ஏமாந்த பெண்களில் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

ஒரு வாலிபர் இன்ஸ்டாக்ராமில் பல பெண்களை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டார்.கர்நாடகாவின் பெங்களூரில் பியதரஹள்ளி பகுதியில் 32 வயதான திவாகர் என்ற நபர் வசித்து வந்தார் .12ம் வகுப்பு மட்டுமே படித்த இவர் அடிக்கடி சமூக ஊடகத்தில் இன்ஸ்டாகிராமில் சிவில் சர்விஸ் எக்ஸாமுக்கு தயாராகி வருவதாக கூறி பல பெண்களிடம் நட்பு கொண்டார் .மேலும் அவர் தன்னை ஒரு தொழிலதிபர் போல காமித்து கொண்டு பல பங்களாக்கள் முன்பு போட்டோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார் .இதை பார்த்த பல
 


ஒரு வாலிபர் இன்ஸ்டாக்ராமில் பல பெண்களை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் பெங்களூரில் பியதரஹள்ளி பகுதியில் 32 வயதான திவாகர் என்ற நபர் வசித்து வந்தார் .12ம் வகுப்பு மட்டுமே படித்த இவர் அடிக்கடி சமூக ஊடகத்தில் இன்ஸ்டாகிராமில் சிவில் சர்விஸ் எக்ஸாமுக்கு தயாராகி வருவதாக கூறி பல பெண்களிடம் நட்பு கொண்டார் .மேலும் அவர் தன்னை ஒரு தொழிலதிபர் போல காமித்து கொண்டு பல பங்களாக்கள் முன்பு போட்டோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார் .இதை பார்த்த பல மைனர் பெண்கள் முதல் காலேஜ் பெண்கள் வரை அவரின் வலையில் விழுந்தனர் .இப்படி அவர் கடந்த சில ஆண்டுகளாக எட்டு டீனேஜ் பெண்களை அவரின் மோசடி வலையில் விழ வைத்து அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் .சிலரிடம் பண மோசடியும் செய்துள்ளார் .


ஆனால் அவர்கள் யாரும் அவர் மீது புகாரளிக்கவில்லை .சமீபத்தில் கடந்த மாதம் பியதரஹள்ளியைச் சேர்ந்த 17 வயது பெண்ணொருவர் அவரிடம் இன்ஸ்ட்டாகிராமில் நட்பு கொண்டு பழகியுள்ளார் .அந்த பெண்ணிடமும் திவாகர் தன்னை ஒரு பணக்காரர் போல பேசி ஏமாற்றியுள்ளார் .இதை கண்டுபிடித்த அந்த பெண் அவர் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த திவாகரை பிடித்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் இப்படி பல பெண்களை ஏமாற்றியதாகவும் அவர் எட்டு சிறுமிகள் மற்றும் ஒரு அழகு நிலையம் நடத்தும் 24 வயதான பெண் ஆகியோரை இப்படி ஏமாற்றியதாக அவர் வாக்குமூலம் கொடுத்தார் .அதனடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர் .

İstanbul, Turkey – August 25, 2018: Plastic cubes with popular social media services icons, including Facebook, Instagram, Youtube, Twitter and an Apple iPhone 8 smart phone on an desk.