×

“தப்பா உருவான குழந்தைக்கு என்னை அப்பா ஆக்காத” -சந்தேகத்தால் கர்ப்பிணி மனைவியின் கதி

ஒரு கர்ப்பிணி மனைவியை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்திய கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .குஜராத்தின் அகமதாபாத் நகரில் விஜய் சவுகான் என்பவர் நரோல் பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். முதல் ஆறு மாதம் சந்தோஷமாக போன அவர்களின் வாழக்கையில் திடீரென புயல் வீச தொடங்கியது .அந்த பெண் கர்ப்பமானதும் அந்த கணவருக்கும் அவரின் மாமியாருக்கும் சந்தேகம் வந்தது . அதனால் அவரின்
 

ஒரு கர்ப்பிணி மனைவியை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்திய கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .
குஜராத்தின் அகமதாபாத் நகரில் விஜய் சவுகான் என்பவர் நரோல் பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். முதல் ஆறு மாதம் சந்தோஷமாக போன அவர்களின் வாழக்கையில் திடீரென புயல் வீச தொடங்கியது .அந்த பெண் கர்ப்பமானதும் அந்த கணவருக்கும் அவரின் மாமியாருக்கும் சந்தேகம் வந்தது .


அதனால் அவரின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் அப்பா இல்லையென்றும் ,வேறு ஓருவரின் குழந்தையை அவர் வயிற்றில் சுமப்பதாகவும் அவரும் அவரின் மாமியாரும் சந்தேகப்பட்டு அந்த பெண்ணை கொடுமைப்படுத்தினார்கள் ,அதனால் அந்த வீட்டில் தினமும் சண்டையும் ,சச்சரவுமாக இருந்துள்ளது .மேலும் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லவும் மறுத்துள்ளார்கள் .அதனால் அந்த பெண்ணை அவரின் தந்தையின் வீட்டிற்கு விரட்டியடித்து விட்டாகள் .
தந்தையின் வீட்டிற்கு சென்ற அந்த பெண் அவரிடம் தன்னுடைய கணவரும் மாமியாரும் குழந்தை பற்றி சந்தேகப்பட்டு செய்யும் கொடுமைகள் பற்றி கூறியுள்ளார் .அதனால் கோபமுற்ற அவரின் தந்தை தன்னுடைய மகளை அழைத்து கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் அவரின் கணவர் விஜய் சவுகான் மற்றும் மாமியார் மீது புகாரளித்தார் .போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு இந்த வழக்கின் சம்பந்தப்பட்ட அந்த இருவரையும் கூப்பிட்டு விசாரித்து வருகிறார்கள் .அப்போது போலீசார் அந்தப் பெண் தனது கணவருடன் முதலில் சமரசம் செய்ய முயன்றார், ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிக்காததால் புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.