×

"பெண் குளிப்பதை போனில் வீடியோ எடுத்துக்கொண்டே .. "வாலிபர் செஞ்ச வேலையால் சிக்கினார் 

 

இளம்பெண்,  குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டே ,அதை ரசித்த  வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த பின்னர் அவரை, போலீசார் கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவை சேர்ந்தவர் 26 வயதான மணி அருள்  மாங்காடு அடுத்த கோவூரில் வசிக்கிறார் .இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் சூபர்வைசராக வேலை செய்கிறார். அவரின் வீட்டுக்கு அருகே ஒரு இளம் பெண் தினமும் குளிப்பதை அந்த வாலிபர் நோட்டமிட்டு வந்துள்ளார் . 
நேற்று காலை அந்த  இளம்பெண், அவரது வீட்டின் குளியலறையில் வழக்கம் போல குளித்து கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட மணிஅருள், அங்கு சென்று ஜன்னல் வழியாக தனது செல்போன் மூலம் அதை வீடியோ எடுத்து கொண்டே ரசித்து கொண்டிருந்தார்.அப்போது ஏதோ சத்தம் கேட்டு அந்த பெண் திரும்பி பார்த்த போது அந்த வாலிபர் தன்னை ரசித்துக்கொண்டே படமெடுப்பதை பார்த்து அதிர்ந்து சத்தம் போட்டு கத்தினார் .உடனே அக்கம் பக்கத்தினர் அங்கே வந்து அந்த வாலிபரை பிடித்தனர் .பின்னர் அவரை அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில்  ஒப்படைத்தனர் .போலீசார் அவரின் செல்போனை ஆராய்ந்த போது அந்த பெண் குளிக்கும் வீடியோ இருந்தது .அதனால் போலீசார் அவரை கைது  செய்தனர்  .