×

“பேண்ட் ஆர்டர் செய்தவருக்கு புழு பார்சலில் வந்தது” -நைக் நிறுவனம் செய்யுற வேலையா இது?

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் வசிக்கும் பெண் ஸ்மித்தி என்பவர் செருப்பிலிருந்து பருப்பு வரை ஆன்லைனில்தான் ஆர்டர் செய்து வாங்குபவர் .அவர் இந்த தொற்று நோய் பரவல் காலத்தில் எதற்கும் வெளியே போக மாட்டார் ,இந்நிலையில் அவர் பிரபலமான நைக் நிறுவனத்தில் தனக்கு சில பேண்ட் களை ஆர்டர் செய்தார் . அந்த ஆர்டரின் பேரில் அவர் ஆர்டர் செய்த பேண்ட் துணிகள் அவருக்கு வந்ததும், அதை பிரித்து பார்த்த பெண் ஸ்மித்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது .அப்போது
 

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் வசிக்கும் பெண் ஸ்மித்தி என்பவர் செருப்பிலிருந்து பருப்பு வரை ஆன்லைனில்தான் ஆர்டர் செய்து வாங்குபவர் .அவர் இந்த தொற்று நோய் பரவல் காலத்தில் எதற்கும் வெளியே போக மாட்டார் ,இந்நிலையில் அவர் பிரபலமான நைக் நிறுவனத்தில் தனக்கு சில பேண்ட் களை ஆர்டர் செய்தார் .


அந்த ஆர்டரின் பேரில் அவர் ஆர்டர் செய்த பேண்ட் துணிகள் அவருக்கு வந்ததும், அதை பிரித்து பார்த்த பெண் ஸ்மித்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது .அப்போது அந்த பார்செலில் துணிகளுக்கிடையே புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன .அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே அந்த நைக் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் அதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை .பிறகு அவர் அந்த பார்செலில் இருந்த துணிகளை துவைத்து அணிந்து கொண்டார்
ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்த அவர் அந்த நைக் நிறுவன பார்செலில் வந்த புழுக்களின் படங்களையும் வீடியோக்களையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார் ,இதனால் அந்த வீடியோக்களை பார்த்த ஊடகத்தினர் அதிர்ச்சியடைந்து அதை பலருக்கு ஷேர் செய்தார்கள் .இதை பார்த்த நைக் நிறுவனம் பிறகு அவரை தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டது .