×

"கண்ட லாட்ஜுக்கு தூக்கி வந்து கண்டமாக்கிட்டியே" -ஒரு மாணவியை நாசம் செய்த வாலிபரின் கதி 

 

கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 

கர்நாடக மாநிலம்  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு கோட்டேகார் அருகே தேரலகட்டே பகுதியை சேர்ந்தவர் 28 வயதான  இர்பான்.. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த  பி.யூ. கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தனர் .பின்னர் அந்த இர்பான் திடீரென்று அந்த பெண்ணிடம் வந்து அவரை காதலிப்பதாக கூறி அவரை தன்னுடைய காரில் ஒரு லாட்ஜுக்கு கடத்தி சென்று சிறை வைத்தார் .
பின்னர் அந்த லாட்ஜில் வைத்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார் .மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை  செய்வதாக அந்த  மாணவியை மிரட்டினார்  .அதன் பிறகு அந்த பெண்னின்  பெற்றோர்  அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை அந்த லாட்ஜிலிருந்து மீட்டு,அந்த வாலிபரை கைது செய்து கூட்டி  வந்தனர் .கடந்த 2014ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து  வந்தது  .அதன் தீர்ப்பு இப்போது .வெளிவந்தது அப்போது அந்த பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த   இர்பானுக்கு கோர்ட் ஏழு  ஆண்டு சிறை  தண்டனை  வழங்கியது .