×

ஒரு கோடி கூலி கொடுத்து மாமனாரை கொன்ற மருமகன்-மகள் குடும்ப விஷயத்தில் தலையிட்டதால் வந்த வினை..

சொந்த மாமனாரை அடிக்கடி குடும்ப விஷயத்தில் தலையிட்டு டார்ச்சர் செய்த காரணத்தால், அவரின் மருமகன் கூலிப்படைக்கு 1 கோடி கொடுத்து தீர்த்து கட்டியுள்ளார் . ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் பாட்ஷாபூரில் வசிக்கும் நரேஷ் என்பவர் ஒரு மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் சிறை சென்றார் .அங்கு அவர் விகாஸ் என்பவரை சந்தித்தார் ,இருவரும் ஒன்றாக சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தனர் . இந்நிலையில் நரேஷின் மாமனார் ஹர்பால் என்பவர் அடிக்கடி நரேஷின் குடும்ப
 

சொந்த மாமனாரை அடிக்கடி குடும்ப விஷயத்தில் தலையிட்டு டார்ச்சர் செய்த காரணத்தால், அவரின் மருமகன் கூலிப்படைக்கு 1 கோடி கொடுத்து தீர்த்து கட்டியுள்ளார் .

 

ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் பாட்ஷாபூரில் வசிக்கும் நரேஷ் என்பவர் ஒரு மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் சிறை சென்றார் .அங்கு அவர் விகாஸ் என்பவரை சந்தித்தார் ,இருவரும் ஒன்றாக சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தனர் .


இந்நிலையில் நரேஷின் மாமனார் ஹர்பால் என்பவர் அடிக்கடி நரேஷின் குடும்ப விவகாரத்தில் தலையிடுவாராம் .இது நரேஷுக்கு பிடிக்கவில்லை .அதன் உச்சகட்டமாக நரேஷின் பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு கூட மகளை போக விடாமல் ஹர்பால் தடுத்துள்ளார் .இதனால் கோபமுற்ற நரேஷ் அவரின் சிறை நண்பர் விகாஷிடம் 1 கோடி பணம் கொடுத்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி விகாஸ் இரண்டு ஆண்டுக்கு முன்பு ,ஹர்பாலை நடைப்பயிற்சி சென்ற போது சுட்டு கொன்றுள்ளார் .
இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளாக போலீசுக்கு துப்பு கிடைக்காமல் திணறி வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை விகாஸை போலீசார் கைது செய்தனர் .அவர் கொடுத்த வாக்குமூலத்தில் நரேஷ்தான் தன் மாமனாரை 1 கோடி கொடுத்து கொல்ல சொன்ன விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது .இப்போது போலீசார் நரேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் மேலும் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .