×

"அவனை நெனைச்சிக்கிட்டு ,இவனை அணைக்க முடியாது டாடி"  -மறுத்த மகளுக்கு நேர்ந்த கதி. 

 

வேறு சாதி வாலிபருடனான காதலை கைவிட மறுத்த மகளை  கழுத்தை நெரித்து  கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா பீரூர் அருகேயுள்ள கென்சேகொண்டன ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரப்பா. இவரது மகள் 18 வயதான ராதா அதேப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில்  2-ம் ஆண்டு பட்ட படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ராதாவுக்கு, அதேப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த வாலிபர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் அந்த பெண்னின் தந்தை அந்த காதலை எதிர்த்தார் .அதனால் அவரின் மகளிடம் அந்த காதலை மறந்து விடுமாறு மன்றாடி கேட்டார் .ஆனால் அந்த பெண் அவர் சொன்னதை கேட்காமல் மீண்டும் அந்த வாலிபரை காதலித்து வந்தார் .
அதனால் அந்த ராதாவின்  தந்தை  அந்த மகளை அவரின் உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு  வந்தார்  .அங்கும் அந்த பெண்ணுக்கு அவரின்  உறவினர்கள் அந்த காதலை  மறந்து விடுமாறும் ,தந்தை பார்க்கும் மாப்பிள்ளையை   கல்யாணம் செய்து  கொள்ளுமாறும்  சொன்னார்கள் .அதன் பிறகு அந்த மகளை அவரின் தந்தை தன்  வீட்டிற்கு கூட்டி  வர சென்றார் .பின்னர் வீட்டுக்கு வரும்போது அந்த மகளிடம் தான் பார்க்கும் மாப்பிள்ளையை  கல்யாணம் செய்து கொள்ளுமாறு  கேட்டார் .அதற்கு அந்த பெண் மறுத்ததால் கோவப்பட்ட அந்த தந்தை அந்த பெண்ணை ஒரு புதருக்குள் தள்ளி கொலை  செய்தார்  .பின்னர் வீட்டிற்கு வந்து அவரின் மகன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம்  தன்  மகளை கொலை செய்து விட்டதாக கூறினார் .பிறகு  அவர்கள் போலீசில்  புகார் தந்தனர்.போலீசார் அந்த தந்தையை கைது செய்தனர் .