×

“கடனை ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க” கொடுத்த கடனை கேட்டதற்கு ,மனைவியை கெடுத்ததாக மிரட்டிய நண்பர்

ஒருவர் தான் கொடுத்த கடனை கேட்டதற்கு ,கடன் வாங்கியவர் தன்னுடைய மனைவியை கெடுத்ததாக புகார் கூறி அவரை மிரட்டிய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கிலுள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் ஒருவர் ,தன்னுடைய நண்பருக்கு 80000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார் . சில நாட்களுக்கு பிறகு அந்த வங்கியில் வேலை செய்பவர் தன்னுடைய நண்பரிடம் தான் கொடுத்த கடனை திருப்பி தருமாறு கேட்டார் . அப்போது அவர் கடனை திருப்பி தராமல் ஏமாற்ற
 

ஒருவர் தான் கொடுத்த கடனை கேட்டதற்கு ,கடன் வாங்கியவர் தன்னுடைய மனைவியை கெடுத்ததாக புகார் கூறி அவரை மிரட்டிய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது

.ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கிலுள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் ஒருவர் ,தன்னுடைய நண்பருக்கு 80000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார் . சில நாட்களுக்கு பிறகு அந்த வங்கியில் வேலை செய்பவர் தன்னுடைய நண்பரிடம் தான் கொடுத்த கடனை திருப்பி தருமாறு கேட்டார் .


அப்போது  அவர் கடனை திருப்பி தராமல் ஏமாற்ற ,தன்னுடைய வங்கி நண்பர் தன்னுடைய மனைவியை பலாத்காரம் செய்து விட்டதாக போலீசில் புகாரளிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார் .அதற்கு அவரின் மனைவியும் உடந்தையா இருந்து அந்த நபரை மிரட்டியுள்ளார் .இதனால் பயந்து போன அந்த நபர் அவரிடம் கடனை கேட்கவில்லை .பிறகு அவர்கள், அவர் பயந்ததை பார்த்து ,உன் மீது போலீசில் புகார் கொடுக்காமலிருக்க மேலும் 10 லட்சம் பணம் கேட்டுள்ளார்கள் .இதனால் அவர் போலீசில் புகாரளித்தார் .
அப்போது போலீசார் அவரை பயந்து போய் அந்த பணத்தினை கொடுப்பது போல நடிக்க வைத்து ,அப்போது போலீசார் மறைந்திருந்து அவரை பிடிக்க திட்டமிட்டார்கள் ,அதன் படி கடந்து புதன் கிழமை அவர் பணத்துடன் அந்நபர் சொன்ன இடத்திற்கு சென்ற போது ஒளிந்திருந்த போலீசார் அவரை கைது செய்தார்கள் .அப்போது அவரின் மனைவி தலைமறைவாகிவிட்டார் ,அவரை போலீஸ் தேடுகிறது .பணம் நண்பர்களை எப்படியெல்லாம் பிரிக்கிறது ,எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்