×

“பச்சைபச்சையாக பேசுவார்,படுக்கைக்கு வர மாட்டார்” – பல லட்சம் இழந்த வாலிபர்கள்

ஒரு வாலிபர் தன்னை பெண்ணென்று கூறி சமூக ஊடகத்தில் பல வாலிபர்களை வீழ்த்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த விஷயம் பல ஆண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஸ்வப்னில் நாயக் என்ற நபர் சமூக ஊடகத்தில் ஒரு பெண்ணின் பெயரில் ஒரு அக்கௌன்ட்டை ஆரம்பித்தார் .மேலும் தன்னுடைய ப்ரொபைல் படமாக ஓர் அழகான பெண்ணுடைய படத்தினை வைத்தார் .பிறகு அவர் தன்னை ஒரு இளம் பெண் என்றும் ,தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி பல
 

ஒரு வாலிபர் தன்னை பெண்ணென்று கூறி சமூக ஊடகத்தில் பல வாலிபர்களை வீழ்த்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த விஷயம் பல ஆண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஸ்வப்னில் நாயக் என்ற நபர் சமூக ஊடகத்தில் ஒரு பெண்ணின் பெயரில் ஒரு அக்கௌன்ட்டை ஆரம்பித்தார் .மேலும் தன்னுடைய ப்ரொபைல் படமாக ஓர் அழகான பெண்ணுடைய படத்தினை வைத்தார் .பிறகு அவர் தன்னை ஒரு இளம் பெண் என்றும் ,தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி பல ஆண்களுக்கு வலை வீசுவார் .அதுமட்டுமல்லாமல் அவரின் வலையில் சிக்கும் ஆண்களிடம் பெண் குரலில் பச்சைபச்சையாக பேசி அவர்களின் ஆசையை தூண்டுவார் .
அவரின் ஆபாச பேச்சால் மயங்கும் ஆண்களின் பர்ஸை போனிலேயே காலி செய்து விடுவார் .அதற்கடுத்த கட்டமாக எந்த வாலிபராவது உறவுக்கு அழைத்தால் உடனே போனை கட் செய்து விட்டு அவரின் நம்பரை பிளாக் செய்து விடுவார் .
இந்நிலையில் அக்டோபர் 22 ம் தேதி சமூக ஊடக பயனர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ .23 லட்சம் மோசடி செய்ததாக அவரின் மீது புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபரின் வங்கி கணக்குகள் மற்றும் சமூக ஊடக சுயவிவரங்களை போலீசார் ஆய்வு செய்தனர். பிறகு தகவல் தொழில்நுட்ப உதவியுடன், கர்நாடகாவில் உள்ள தாவங்கேரேவில் அவர் இருப்பதை கண்டறிந்தார்கள் .பிறகு அவரை ரகசியமாக கண்காணித்தனர். அதன்பிறகு, அவர்கள் கர்நாடக காவல்துறையின் சைபர் செல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களின் உதவியுடன் அவரை கைது செய்தனர்.