×

"துணியில்லாம நடிச்சாதான் சினிமாவில் சாதிக்கலாம் " - ஆசை காமித்து பெண்களை ஏமாற்றிய நபர்

 

தனியார் விடுதியில் பெண்களை ஆபாச படமெடுத்து பணம் பறித்த நபரை போலீஸ் கைது செய்தது.

தமிழகத்தின்  ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் இமானுவேல் ராஜா  என்ற நபர் சினிமா எடுப்பதாக கூறி அந்த பகுதியில் பலரிடம் ஏமாற்றி வந்தார் .அதை உண்மையென்று நம்பிய பல வாலிபர்களும் பெண்களும் அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தனர் .அப்போதெல்லாம் அவர் அந்த வாலிபர்களிடம் போட்டோ மற்றும்  பணம் போன்றவற்றினை வாங்கியுள்ளார் .பின்னர் அவரை தேடி வரும் அழகான பெண்களிடம் படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை அடிக்கடி அவரின் ஆபீஸிற்கு வர சொன்னார் .
 அப்போது அந்த பெண்களிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஒரு தனியார்  விடுதிக்கு அழைத்து சென்றார் .அங்கு அவர்களிடம் முதலில் இப்படி  ஆபாசமாக நடித்தால்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்றார் .அதை நம்பிய சில பெண்களை வைத்து ஆபாச  படம் எடுத்தார் .பின்னர்  அந்த படத்தை அவர்களிடம் காமித்து  சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டினார்  .இதனால் பயந்த சில பெண்கள் அவர் மீது போலீசில் புகார் கூறினர் .போலீசார் அவர்  மீது வழக்கு பதிந்த பிறகு அந்த இமானுவேல் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி பெண்களை மிரட்டி பணம் பறித்த இமானுவேல் ராஜாவிடம் இருந்து ஏடிஎம் கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.