×

"அந்தரங்கமாயிருக்க தொந்தரவு கொடுக்கிறானே" -17 வயது பெண் புலம்பல் -அடுத்து கல்யாணமானவருக்கு நேர்ந்த கதி 

 


மனைவி பிரிந்து சென்றதும் தனியாக வாழ்ந்த ஒரு  நபர் ஒரு 17 வயதான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் 


தமிழகத்தின் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த 42 வயதான முனியாண்டி அங்குள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிகிறார் .இவர்  திருமணமாகி தன் மனைவியுடன் வசித்து வந்தார் ,ஆனால் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .அதன் பின்னர் தனியாக வசித்து வந்த அவர் தனக்கு ஏதாவது உல்லாசத்திற்கு பெண் கிடைக்குமா என்று ஏங்கி வந்தார் .இதனால் அந்த பகுதியில் வசிக்கும் எந்த பெண்ணாவது தன் வலையில் விழுவாரா என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தார் .
இந்த நிலையில் முனியாண்டி ,அதே பகுதியில் வசிக்கும் , 17 வயது பெண்ணொருவருக்கு வலை விரித்து அவருக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்தார் .இதனால் மிகவும் கடுப்பான அந்த பெண் அந்த முனியாண்டியை பலமுறை எச்சரித்து, தன்னிடம் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்று கூறினார் ,ஆனால் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததில் அப்பெண்  திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் மீது பாலியல் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.