×

காருக்குள் இருந்த ஆண் சடலம்! கூடுவாஞ்சேரியில் பரபரப்பு

 

கூடுவாஞ்சேரி அருகே  ஊப்பர் நிறுவன டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தைலாவரம் பகுதியில் சாலையோரம் நின்ற காரில் ஆண் சடலம் கிடப்பதாக கூடுவாஞ்சேரி காவல்
நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கூடுவாஞ்சேரி காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஊப்பர் கால் டாக்ஸி நிறுவனம் தரப்பில் ஜெயதுரைக்கு கடந்த மூன்று நாட்களாக தொடர்பில் இல்லை என்பதால் தொடர்ந்து போன் செய்தும் ஜெயதுரை போன் எடுக்காததால் ஜிபிஆர்எஸ் மூலமாக கண்டறிந்ததில் தைலாவரம் பகுதியில் டவர் காட்டியதை வைத்து தைலாவரம் வந்து பார்த்தபோது ஜெயதுரை சடலமாக காரிலேயே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயதுரை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் ஜெயதுரை(41) என்பதும் இவர் ஊப்பர் டாக்சி நிறுவனத்தில் கடந்த மூன்று மாதமாக டிரைவர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இறந்த நபர் 24மணிநேரமும் மதுபோதையில் இருப்பதாகவும் மது அருந்திவிட்டு முறையாக உணவு சாப்பிடுவதில்லை. அதனால் இருந்திருக்கலாம் என கூறினாலும் ஜெய் துரையின் காலில் ரத்தக் காயம் இருப்பது கண்டறியப்பட்டது. ஜெயதுரை சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.அதனை தொடர்ந்து ஜெயதுரை உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஜெயதுரை இறந்து மூன்று நாட்கள் இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.