×

`கடும் காய்ச்சலால் அவதி; 11 கி.மீ தூரம் அலைகழிப்பு!’- அவனியாபுரம் முதியவருக்கு நடந்த துயரம்

உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு இஎஸ்ஐ மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்துள்ள நிலையில், அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த முதியவர் ட்ரை சைக்கிளில் 11 கிலோ மீட்டர் தூரம் அலைகழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். முதியவரான இவர், காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்ல இவரிடம் போதிய பணம் இல்லை. இந்த நிலையில், முதியவரை அங்கிருந்தவர்கள் ட்ரை சைக்கிள் மூலம் பாலரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு
 

உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு இஎஸ்ஐ மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்துள்ள நிலையில், அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த முதியவர் ட்ரை சைக்கிளில் 11 கிலோ மீட்டர் தூரம் அலைகழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். முதியவரான இவர், காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்ல இவரிடம் போதிய பணம் இல்லை. இந்த நிலையில், முதியவரை அங்கிருந்தவர்கள் ட்ரை சைக்கிள் மூலம் பாலரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அப்போது தத்தனேரியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறியதாக தெரிகிறது. அங்கு சென்ற முதியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்க யாரும் முன்வராததோடு, அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து அந்த முதியவர் ட்ரை சைக்கிள் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நலன் குன்றிய முதியவர் ஒருவரை ட்ரை சைக்கிளில் அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டு 11 கிலோ மீட்டர் தூரம் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.