×

“உங்கப்பன ஜெயில்ல போடலாம் ,அப்புறம் நாம டூயட் பாடலாம் ” காதலியின் தந்தையை சிக்க வைக்க காதலன் செய்த சதி.

தன்னுடைய காதலியின் தந்தை தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் அவரை போலீசில் சிக்க வைக்க அந்த காதலன் ஒரு கடத்தல் நாடகம் நடத்தினார். உத்தரபிரதேசத்தில் அமேதி மாவட்டத்தில் சுல்தான்பூரின் லம்புவாவில் வசிக்கும் ஜிதேந்திர குமார் என்ற 20 வயதான இளைஞர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .அவர்களின் காதலையும் அந்த காதலனையும் அந்த காதலியின் தந்தைக்கு பிடிக்கவில்லை .அதனால் அவர் அந்த மகளின் காதலன் ஜிதேந்திர குமாரை பலமுறை எச்சரித்தார் .ஆனால் அவரால்
 

தன்னுடைய காதலியின் தந்தை தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் அவரை போலீசில் சிக்க வைக்க அந்த காதலன் ஒரு கடத்தல் நாடகம் நடத்தினார்.

உத்தரபிரதேசத்தில்  அமேதி மாவட்டத்தில் சுல்தான்பூரின்  லம்புவாவில் வசிக்கும் ஜிதேந்திர குமார் என்ற 20 வயதான   இளைஞர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .அவர்களின் காதலையும் அந்த காதலனையும் அந்த காதலியின் தந்தைக்கு பிடிக்கவில்லை .அதனால் அவர் அந்த மகளின் காதலன் ஜிதேந்திர குமாரை பலமுறை எச்சரித்தார் .ஆனால் அவரால் அவரின் மகளை மறக்க முடியவில்லை .அதனால் அவர் தன்னுடைய காதலியின் தந்தையை சிறைக்கு அனுப்பிவிட்டால் தான் தனது காதலியோடு உல்லாசமாக இருக்கலாம் என்று திட்டம் போட்டார் .

அதனால் இந்த  ஜனவரி மாதம் 23ம் தேதி   குமார் ஒரு மறைவான இடத்தில சென்று ஒளிந்து கொண்டார் .பின்னர் மறு  நாள் அவரின் தந்தைக்கு அவரின் நண்பர் ஒருவர்  போன் செய்தார் .அப்போது பேசிய அவர்  தங்களின் மகனை கடத்தி வைத்துருப்பதாக கூறி அவரை உயிருடன் அனுப்ப 10 லட்சம் பணம் தரவேண்டுமென்று கூறினார் .அதை கேட்டு பதற்றமடைந்த அந்த குமாரின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள் .அப்போது அந்த போன் அழைப்பு வந்த செல்போனை ஆய்வு செய்து, அவர்  இருக்குமிடத்தை கண்டறிந்தார்கள்  .அங்கு போலீசார்  அதிரடியாக சென்று அங்கிருந்த ஜிதேந்திரகுமார் மற்றும் அவரின் நண்பர்கள் குழுவை பிடித்தார்கள் .அப்போது போலீசார் குமாரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய காதலியின் தந்தை தங்களின் காதலை ஏற்காததால் அவரை  இந்த கடத்தலில் சிக்க வைக்க தாங்கள் இப்படி ஒரு நாடகத்தை நடத்தினோம் என்று கூறினார் .மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .