×

15 வயதில் காதல், 17 வயதில் கர்ப்பம்! சீரழியும் 2K கிட்ஸ்!

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞர்  போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புளிமஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளைஞர் தௌபிக். இவரும் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தௌபிக் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி உள்ளார். சிறுமி கர்ப்பமானதால் வீட்டில் தெரிந்தால் பிரச்சனை ஆகிடும் என்று எண்ணி அவரை திருப்பூருக்கு தௌபிக் அழைத்து சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியை காணவில்லை என்று பல்வேறு இடங்களில் தேடிய சிறுமியின் பெற்றோர் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் சிறுமி காணவில்லை என்று வழக்கு பதிவு செய்து சிறுமையை தேடி வந்த நிலையில் சிறுமி 18 வயது இளைஞர் தௌபிக்குடன் திருப்பூரில் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து திருப்பூர் சென்ற போலீசார் சிறுமியை மீட்டு சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞர் தௌபிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.