×

பிறந்த நாளில் கிரிக்கெட் போட்டி நடத்திய வழக்கறிஞர் வெட்டிக்கொலை! கொலையாளிகள் 7 பேரை தேடும் தனிப்படை

சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று இரவு 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டவர், வில்லிவாக்கம் மேட்டுத்தெருவில் வசித்து வந்த வழக்கறிஞர் ராஜேஷ்(வயது38) என்பது தெரியவந்தது. ராஜேஷின் மனைவி ரம்யா, மக்கள் ஆளும் அரசியல் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை கொண்டு ஆய்வு செய்ததில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கிறார்கள். ராஜேஷுக்கு நேற்று பிறந்த தினம். பிறந்த நாளை முன்னிட்டு
 

சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று இரவு 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டவர், வில்லிவாக்கம் மேட்டுத்தெருவில் வசித்து வந்த வழக்கறிஞர் ராஜேஷ்(வயது38) என்பது தெரியவந்தது. ராஜேஷின் மனைவி ரம்யா, மக்கள் ஆளும் அரசியல் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை கொண்டு ஆய்வு செய்ததில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கிறார்கள்.

ராஜேஷுக்கு நேற்று பிறந்த தினம். பிறந்த நாளை முன்னிட்டு வியாசர்பாடி பி.வி. காலணியில் கால்பந்தாட்டப் போட்டியை நடத்தினார். விளையாட்டு போட்டி முடிந்ததும் தனது காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தவர், எம்.டி.எச். சாலையில் உள்ள நண்பர் கோகுலின் அலுவலகத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கே அரிவாளுடன் நுழைந்த 7 பேர் சராமரியாக வெட்டித்தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். படுகொலையை நேரில் பார்த்த நண்பர்கள் அலறி அறித்து ஓடிவிட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், பல கட்டப்பஞ்சாயத்துகளில் ராஜேஷுக்கு எதிரிகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2015ம் ஆண்டில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் ஸ்டாலின் கொலை வழக்கிலும் குற்றவாளியாக இருப்பதும் தெரியவந்துள்ளது, அதனால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

rep image

கொலை செய்ய வந்தவர்கள் 7 பேரும் முகக்கவசமும் தலைக்கவசமும் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காணுவதில் போலீசாருக்கு சிக்கல் எழுந்துள்ளது.