×

“கடனை கேட்ட வக்கீலின் ,உடலை புதைத்த விவேக்” -கடனை திருப்பி கேட்டவருக்கு நேர்ந்த கதியை பாருங்க

நண்பருக்கு கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட வக்கீலை ,அவரின் நண்பரே கொலை செய்து குழி தோண்டி புதைத்ததால் அவரின் குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது. உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாரில் குர்ஜாவின் குல்ஷன் விஹார் காலனியில் வசிக்கும் வக்கீல் தர்மேந்திர சவுத்ரி என்பவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார் .அவர் இந்த வியாபார விஷயமாக விவேக் என்பவருக்கு 60லட்சம் கடன் கொடுத்திருந்தார்.அந்த கடனை விவேக்கிடம் அவர் பலமுறை கேட்டும் தரவில்லை . இதனால் கடும் கோபமுற்ற வக்கீல் தர்மேந்திரா ஜூலை
 

நண்பருக்கு கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட வக்கீலை ,அவரின் நண்பரே கொலை செய்து குழி தோண்டி புதைத்ததால் அவரின் குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது.
உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாரில் குர்ஜாவின் குல்ஷன் விஹார் காலனியில் வசிக்கும் வக்கீல் தர்மேந்திர சவுத்ரி என்பவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார் .அவர் இந்த வியாபார விஷயமாக விவேக் என்பவருக்கு 60லட்சம் கடன் கொடுத்திருந்தார்.அந்த கடனை விவேக்கிடம் அவர் பலமுறை கேட்டும் தரவில்லை . இதனால் கடும் கோபமுற்ற வக்கீல் தர்மேந்திரா ஜூலை 25ம் தேதியன்று விவேக்கின் அலுவலகம் சென்று கொடுத்த பணத்தை சத்தம் போட்டு கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .அந்த சண்டையின் உச்சமாக விவேக் ,வக்கீலை அடித்து கொலை செய்துள்ளார் .பிறகு அவரின் நண்பரோடு சேர்ந்து அவரின் உடலை அங்கேயே ஒரு தோட்டத்தில், எட்டு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளார் .


இரண்டு நாட்களாக வக்கீலை காணாத அவரின் குடும்பம் போலிஸில் புகார் கொடுத்தது ,.அப்போது போலீஸ் விசாரணையில் வக்கீல் அவரின் நண்பர் விவேக் என்பவரின் அலுவலகத்துக்குள் சென்றவர் திரும்பி வெளியே வராதது அங்குள்ள சிசிடிவி காமெராவில் பதிவாகியிருந்தது .அதை வைத்து விவேக்கை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், 60லட்ச ரூபாய் தான் அவரிடம் வாங்கிய கடனை கட்ட முடியாததால் அவரை இரண்டு நண்பர்கள் உதவியோடு கொலை செய்து, இங்கு குழி தோண்டி புதைத்த உண்மையை ஒப்புக்கொண்டார் .இதனால் போலீசார் அவர்கள் மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து ,வக்கீலின் பிரேதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர் .