×

“தக்காளி மூட்டையில் தலை ,உருளைக்கிழங்கு மூட்டையில் உடல்” -மாமியாரை துண்டாக்கி பார்சல் செய்த மருமகள்.

கொல்கத்தாவின் ஹரிதேவ்பூர் பகுதியில் வசிக்கும் சுஜாமணி என்ற 60 வயது பெண் அங்குள்ள ஒரு கோவிலில் பூ வியாபாரம் செய்து வந்தார் .அவருக்கும் அவரின் மருமகள் சுஜாதாவுக்கும் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருந்தது .இதனால் அவரின் மருமகள் வாழ்க்கை தினமும் சண்டையும் சச்சரவுமாக இருந்துள்ளது .இதனால் சுஜாதாவின் குடும்பத்தார் அவரின் மாமியார் சுஜாமணியை கொலை செய்ய முடிவு செய்தனர் . அவர்களின் கொலை திட்டப்படி மருமகளும் ,அவரின் குடும்பத்தாரும் அவரின் மாமியார் சுஜாமணியை விருந்துக்கு அழைத்து,
 

கொல்கத்தாவின் ஹரிதேவ்பூர் பகுதியில் வசிக்கும் சுஜாமணி என்ற 60 வயது பெண் அங்குள்ள ஒரு கோவிலில் பூ வியாபாரம் செய்து வந்தார் .அவருக்கும் அவரின் மருமகள் சுஜாதாவுக்கும் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருந்தது .இதனால் அவரின் மருமகள் வாழ்க்கை தினமும் சண்டையும் சச்சரவுமாக இருந்துள்ளது .இதனால் சுஜாதாவின் குடும்பத்தார் அவரின் மாமியார் சுஜாமணியை கொலை செய்ய முடிவு செய்தனர் .


அவர்களின் கொலை திட்டப்படி மருமகளும் ,அவரின் குடும்பத்தாரும் அவரின் மாமியார் சுஜாமணியை விருந்துக்கு அழைத்து, அவர்கள் சமைத்த உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தனர் .அதை சாப்பிட்ட அவரின் மாமியார் சுஜாமணி மயங்கி விழுந்தார் .
உடனே அவரின் மருமகள் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து சுஜாமணியை அடித்து கொலை செய்தனர் .பிறகு அவரின் தலையை வெட்டி ஒரு தக்காளி கூடைக்குள்ளும் ,உடலை தனியாக வேறு ஒரு உருளைக்கிழங்கு கூடைக்குள்ளும் பார்சல் செய்து, அந்த பகுதியில் சென்ற ஒரு வேனில் தூக்கி போட்டுள்ளார்கள் .
அதன் பிறகு அந்த காய்கறி வேன் கொல்கத்தா நகரின் பல சோதனை சாவடிகளில் சோதனை செய்யப்பட்டபோது அதனுள்ளே ஒரு பிணமிருப்பது கண்டுபிக்க முடியவில்லை .ஆனால் ஒரே ஒரு போக்கு வரத்து போலீசார் அழுகிய நாற்றம் வருவதை கண்டு, காய்கறி கூடையை சோதனை செய்தார் .அப்போது உள்ளே 60 வயது பெண்ணின் பிணம் இருப்பதை கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, மருமகளும் அவரின் குடும்பத்தாரும் சேர்ந்து மாமியாரை கொலை செய்து விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.