×

குழந்தைகள் வதை ஆபாச படம் பார்த்தவர்களை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீஸ்! – கேரளாவில் அதிர்ச்சி

கேரளாவில் சிறுவர்கள் வதை பாலியல் வன்கொடுமை வீடியோ, புகைப்படம் பார்த்தவர்கள், ஷேர் செய்தவர்களை ரகசியமாக கண்காணித்து போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சிறுவர் வதை பாலியல் படங்கள், வீடியோக்களை பார்த்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது கேரளாவிலும் அதுபோன்று ரகசிய கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி மாநிலம் முழுவதும் 117 இடங்களில் ரகசிய சோதனை நடத்தப்பட்டு 47 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து
 

கேரளாவில் சிறுவர்கள் வதை பாலியல் வன்கொடுமை வீடியோ, புகைப்படம் பார்த்தவர்கள், ஷேர் செய்தவர்களை ரகசியமாக கண்காணித்து போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிறுவர் வதை பாலியல் படங்கள், வீடியோக்களை பார்த்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது கேரளாவிலும் அதுபோன்று ரகசிய கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி மாநிலம் முழுவதும் 117 இடங்களில் ரகசிய சோதனை நடத்தப்பட்டு 47 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இது குறித்து போலீஸ் ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் கூறுகையில், “வீடுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. வீடுகளில் நிர்வாணமாக இருக்கும் சிறுவர், சிறுமியர் படம், வீடியோக்களை எடுத்து சிலர் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். டார்க் நைட் என்ற இணையதளம் வாயிலாக இது போன்ற படங்கள், வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்ப்பது குற்றமாகும். கேரளாவில் இப்படி செய்பவர்களை கண்காணித்து வருகிறோம். கைது நடவடிக்கை தொடரும்” என்றார்.
தமிழகத்தில் குழந்தைகள் வதை ஆபாச படம் தொடர்பாக ஒரு சிலர் தான் கைது செய்யப்பட்டனர். பலரும் சிக்குவார்கள் என்று கூறப்பட்டது ஆனால் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இந்த வழக்கை விசாரித்துவந்த ரவியும் மாற்றப்பட்டுள்ளார். ஆனால் கேரளாவில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துக் கிட்டத்தட்ட 50 பேரைக் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே இந்த விவகாரத்தில் அதிக கைது நடந்தது கேரளாவில்தான். ஒவ்வொரு மாநில அரசும் தீவிர நடவடிக்கை எடுத்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுவார்கள். கைது செய்யப்படுகிறார்களோ இல்லை இதுபோன்ற வக்கிர எண்ணங்களாவது குறையும்.