×

“தாயோடு பழகி ,குழந்தையை கடத்தி…” -ஏசி மெக்கானிக் செஞ்ச ஏடாகூடமான வேலை

கொரானாவால் வேலைவாய்ப்பினை இழந்த ஒரு ஏசி மெக்கானிக், தன்னுடைய வாடிக்கையாளரின் குழந்தையை கடத்தி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்யும் சோனு என்பவர் இந்த கொரானா வைரஸ் நோய் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் வேலை இல்லாமல் அவதிப்பட்டார் .இதனால் அவர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார் ,அதனால் தன்னுடைய நண்பரோடு சேர்ந்து ஒரு மாஸ்டர் பிளான் போட்டார் .அதன்படி ஒரு பணக்காரர் வீட்டு
 

கொரானாவால் வேலைவாய்ப்பினை இழந்த ஒரு ஏசி மெக்கானிக், தன்னுடைய வாடிக்கையாளரின் குழந்தையை கடத்தி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்யும் சோனு என்பவர் இந்த கொரானா வைரஸ் நோய் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் வேலை இல்லாமல் அவதிப்பட்டார் .இதனால் அவர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார் ,அதனால் தன்னுடைய நண்பரோடு சேர்ந்து ஒரு மாஸ்டர் பிளான் போட்டார் .அதன்படி ஒரு பணக்காரர் வீட்டு குழந்தையை கடத்தி பணம் பறிக்க இருவரும் திட்டமிட்டனர் .அப்போது சோனுவுக்கு ஒரு பணக்கார பெண்ணோடு பழக்கம் இருப்பதாகவும்,அதனால் அவரின் 11 வயது மகனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார்கள்

அதன்படி அக்டோபர் 13 ஆம் தேதி மாலை 6 மணியளவில், பால் வாங்குவதற்காக வீட்டை விட்டு அந்த சிறுவன் வெளியே வந்தபோது இரண்டு பேரும் குழந்தையை கடத்திச் சென்றனர். பின்பு அவர்கள் அந்த சிறுவனை காசிப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்கள் ..அங்கு அவர்கள் சிறுவனை 3 நாட்கள் வைத்திருந்தனர்.

இதற்கிடையில்,குழந்தையை காணாத சிறுவனின் தாய் காவல்துறைக்குச் சென்று புகாரளித்ததால் , போலீசாரால் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 365 ன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பு காவல்துறையினர் அந்த பகுதியின் சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்தபோது , சிறுவனின் தாயார் சோனுவை அடையாளம் காட்டினார். பின்பு அவர் சோனுவின் மொபைல் எண்ணை போலீசாரிடம் கொடுத்தார். அதன் பிறகு போலீசார் சோனுவை கைது செய்தார்கள் .