×

லிவ் இன் உறவு... உல்லாச வாழ்க்கைக்கு காதலனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுப்பட்ட பெண்!

 

கடனை அடைக்க காதலனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுப்பட்ட பெண்ணையும் அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர். 

ஆந்திரா மாநிலம்  காக்கிநாடாவைச் சேர்ந்த செசெட்டி ரேவதி (33) என்பவருக்கு   திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு வருடம் முன்பு, கணவருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று, குழந்தைகளை பெற்றோருடன் தங்க வைத்து வேலை செய்வதாகக் கூறி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சனத்நகரில் ஒரு வீட்டு வாடகை எடுத்து  தங்கி வந்தார். லுடோ விளையாடுவதற்கும் ஆன்லைன் கேம்களுக்கும் அடிமையான ரேவதி, குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரா என்ற நானி (23) என்ற இளைஞரை ஆன்லைன் கேம் மூலம் பழகினார்.  

இருவரும் ஆன்லைனில் சாட்டிங் மூலம் நேரில் சந்தித்து இருவரும் சனத்நகரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து 4 மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஏற்கனவே அதிக அளவு கடன் வாங்கிய ரேவதி, அதை அடைக்க கடந்த சில நாட்களாக தனது காதலனுடன் திட்டமிட்டு வந்தார். இருவரும் ரேபிடோ டெலிவரிக்காக அவ்வப்போது ஒன்றாக வெளியே செல்வார்கள்.அவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை காலை மாதபூர் பகுதியில் டெலிவரிக்காக சென்ற ரேவதி, நரேந்திர முதல்வர் ரேவந்த ரெட்டி வீடு இருக்கும் ஜூபிலி ஹில்ஸ் சாலை எண். 44 இல் உள்ள ஒரு டீ கடையில் காத்திருந்தனர். அதே நேரத்தில், சாலையில் நடந்து சென்ற மானசா என்ற  சாப்ட்வேர் இன்ஜினியரை பின் தொடர்ந்து சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். மானசா  புகாரின் பேரில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் சி.சி. கேமிரா மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு ஆந்திர எல்லையை கடக்க முயன்ற  ரேவதி மற்றும் நரேந்திராவை கைது செய்து, 1.5 சவரன் தங்கச் செயின் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஸ்கூட்டி மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.