×

முதலில் கணவர் ,அடுத்து மனைவியும் மகனும் மரணம் - அப்படி என்னதான் அந்த குடும்பத்தில் பிரச்சினை?

 

கணவர் கொரானாவால் இறந்ததும் ,அந்த அதிர்ச்சியை தாங்காத மனைவியும்  மகனும்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது  மனைவி 45 வயதான ராதா . இவர்களது மகன் 22 வயதான நிரஞ்சன் ஒரு ஐ டி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் .
இந்த நிலையில் அந்த குடும்ப தலைவர்  நாகராஜ் கொரோனா தொற்றால் இறந்து விட்டார். இதனால் ராதா தனது மகனுடன் வசித்து வந்தார். அவர்  முதலிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் கணக்காளராகவும், நிரஞ்சன் கோவையில் உள்ள கணினி  நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தனர். அந்த நிரஞ்சன் இப்போது வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகிறார் .அந்த தாயும் மகனும் தங்களின் தந்தை கொரானாவால் இறந்தது முதல் மிகவும் சோகமாக காணப்பட்டனர் .இதனால் அவர் இல்லாமல் வாழ முடியவில்லையே என்ற விரக்தியில் அந்த இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர் .
இது பற்றி அந்த நிரஞ்சனின் நண்பர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த வீட்டினுள் வந்து அந்த இருவரின் சடலத்தையும் கைப்பற்றி விசாரித்தனர் .அப்போது அந்த வீட்டிலிருந்து இறந்தவர் எழுதிய ஒரு தற்கொலை குறிப்பை கைப்பற்றினர் .அதில்  தந்தை இல்லாத இந்த உலகில் தங்களால் தனியாக வாழ முடியவில்லை என்று எழுதியிருந்தது. .அந்தக் கடிதத்தை போலீசார் கைப்பற்றி மேற்கொண்டு விசாரித்து வருகின்றார்கள்.