×

மனைவியை கொலை துண்டுதுண்டாக கூறுபோட்டு ஃபிரிட்ஜ்க்குள் வைத்த கணவன்

 

அசாமில் 25 வயதான மனைவியை கொலை செய்து ஃபிரிட்ஜ்க்குள் வைத்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டார்.

குவஹாட்டியின் பசிஸ்தாபூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராமானுஜன். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நூன்மதியைச் சேர்ந்த ரியா என்ற 25 வயது பெண்ணுடன் திருமணம் நடந்தது. ரியா, ஃபேன்சி பஜாரின் ஏசி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஆடை அலங்காரக் கடையில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு பெற்றோர் இல்லை. ஒரே ஒரு சகோதரர் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்தவாரம் திங்கட்கிழமையன்று, ரியாவுக்கும் ராமானுஜனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணியளவில் ராமானுஜன் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட தகவல்களின்படி, அந்தப் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு, ஒரு கருப்பு பாலித்தீன் பைக்குள் வைக்கப்பட்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது விரல்களும் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரியாவின் டததுண்டுதுண்டான உடலை குடியிருப்பில் இருந்து மீட்ட போலீசார், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஆயுதத்தையும்  கைப்பற்றினர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக உடல் குவஹாட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (GMCH) அனுப்பப்பட்டது. ரியாவை கொலை செய்த அவரது கணவர் ராமானுஜன் காவல்துறையிடம் சரணடைந்து குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.