மனைவியை கொலை செய்த வீடியோவை அவரது பெற்றோருக்கு அனுப்பிய கணவன்!
கர்நாடகாவில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகக் கூறி மனைவி பாக்யஸ்ரீயை கொலை செய்து, அதை வீடியோவாக எடுத்து மனைவியின் பெற்றோருக்கு அனுப்பிய கணவர் பிரவீன் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பிலாகி தாலுகா, கலகலி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி பாக்யஸ்ரீ (23). இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு வயது மகன் உள்ளார். பாக்யஸ்ரீ தனது சொந்த ஊரான மகாலிங்கபுராவைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததாகவும், இதுகுறித்து பிரவீனுக்கு தெரியவந்ததால் பாக்யஸ்ரீ உடன் அடிக்கடி சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாக்யஸ்ரீ கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அங்கு சென்ற பிரவீன், இனி இருவரும் சமாதானமாக வாழ்வதாக கூறி மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அன்று மாலையே பிரவீன், திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகக் கூறி மனைவி பாக்யஸ்ரீயை கொலை செய்து, அதை வீடியோவாக எடுத்து மனைவியின் பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், பாக்யஸ்ரீ உடாஇ கைப்பற்றி பிரவீனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.