வேறு திருமணம் செய்ய போகிறேன் என கூறிய மனைவியை கொலை செய்த கணவன்
கன்னியாகுமரியில் கொலை செய்து கொண்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோயில் வடசேரி காட்டு நாயக்கன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்( 36). இவர் நாகர்கோயில் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார்.இவருக்கு சுமிதா (34) என்ற மணைவியும் சஜின்( 14) என்ற மகனும் உள்ளனர். செந்தில், சுமிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.தற்பொழுது இவர்கள் திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செந்தில் மற்றும் அவரது மணைவி சுமிதாவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக கணவனிடம் கோபித்து கொண்டு சுமிதா ஆதலவிளையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று விடுவது வழக்கம்.பிறகு செந்தில் தனது மணைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவார்.இதைப்போல் கடந்த சில தினங்களுக்கு முன்பும் கணவனுடன் தகராறு செய்த சுமிதா உன்னுடன் வாழ பிடிக்கவில்லை ஆகையால் நான் மறு திருமணம் செய்து கொள்ள போகிறேன் என கூறி தகராறு செய்து விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சுமிதாவை சமாதனம் செய்து தங்கள் வீட்டிற்கு செந்தில் நேற்று அழைத்து வந்தார். பின்னர் தனது மகனை வெளியே சென்று விளையாடி கொண்டு இரு என கூறியுள்ளார் செந்தில். வெளியே விளையாட சென்ற சிறுவன் சுமார் ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பொழுது அவன் தன் தந்தை மற்றும் தாய் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.இந்த அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கதினர் இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். தகவல் அறிந்து வந்த போலிஸார் கணவன், மணைவி இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூர் ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.மேலும் கணவன், மணைவி இருவரும் எப்படி? இறந்தார்கள் என போலிஸார் விசாரனை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தது.
அதன்படி தன் மணைவி வேறு திருமணம் செய்து கொள்ள போகிறேன் என அடிக்கடி கூறி வந்ததாலும், அவருடைய நடவடிக்கைகள் சரியாக இல்லாததாலும், தன் குடும்ப கௌரவம் போய் விடும் என செந்தில் கருதியதாகவும், ஆகையால் தன் மணைவியை தீர்த்து கட்ட முடிவு செய்த செந்தில் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற தனது மணைவி சுமிதாவை அன்பாக பேசி தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து, வீட்டில் இருந்த கத்தியை கொண்டு சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். மேலும் அதே கத்தியால் தன்னை, தானே கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்துள்ளார் எனவும், இதனை தன் மகன் பார்த்து விட கூடாது என்பதற்காக அவனை விளையாட செல்லுமாறு வீட்டில் இருந்து வெளியே அனுப்பினார் எனவும் போலிஸார் முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலிஸார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.தனது மணைவியை குத்தி கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.