இதுக்கெல்லாமா மனைவியை போட்டு தள்ளுவாங்க... திண்டுக்கல்லில் கொடூர கொலை
சாணார்பட்டி அருகே மது போதையில் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வி எஸ் கோட்டை பஞ்சாயத்தில் கட்டாரி குளம் என்னும் கிராமம் உள்ளது. இக்கிரமத்தில் வசித்து வருபவர் பிரபு (38), வேம்பார்பட்டியை சேர்ந்த இவர் சில்வார் பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரி (30)என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பிரபு சரிவர வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. ஈஸ்வரிக்கும் பிரபுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு மது அருந்தி வந்த பிரபுக்கும் ஈஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த பிரபு, ஈஸ்வரியை உலியால் தலையில் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிர் துறந்தார். இது பற்றி அப்பகுதி மக்கள் சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்த சாணார்பட்டி காவல்துறையினர், ஈஸ்வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள பிரபுவை சாணார்பட்டிகாவல்துறையினர்தேடி வருகின்றனர். குடிபோதையில் கணவனை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.