இதுக்கெல்லாமா கொலை செய்வாங்க..? மனைவியை கூறுபோட்ட கணவன்
தேனி அருகே கோவித்துவிட்டு சென்ற மனைவியை கொலை செய்து கண்மாயில் வீசிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்சேர்ந்தவர் பிரவீனா (27). இவர் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர், இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் போடி முந்தல் காலனியை சேர்ந்த மாசு காளை(36). இவர் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பிரவீனாவிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது,
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரவீனாவை அழைத்துக் கொண்டு போடி முந்தல் காலணியில் தனியாக வசித்து வந்தனர். இவ்விருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் மாசுகாளை எவ்வித வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரவீனா மாசு காளையுடன் சண்டையிட்டு கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.வெளியே சென்றவர் இரண்டு நாட்கள் வீட்டுக்கு வராததால் இன்று காலை போடியிலிருந்து தேனி செல்லும் சாலையில் வங்கார் சாமி கண்மாய்யில் இரத்த காயத்துடன் சடலமாக மீட்டனர். சம்பவம் அறிந்த போடி புறநகர் காவல் துறையினர், தீயணைப்ப துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரவீனா தற்கொலை செய்து கொண்டாரா இல்லை... கணவன் அடித்துக் கொன்று கண்மாயில் வீசினாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்