×

மனைவியை அடித்து கொன்ற கணவன் குழந்தைகளுடன் தப்பியோட்டம்

 

அரூரில் கணவன் மனைவி ஏற்பட்ட தகராறில் கணவனால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் பூந்தி மஹால் தெருவில் வசித்து வரும் பூங்கொடி. இவரது கணவர் பெயர் வெங்கடேசன் (லேட்). பூங்கொடி (வயது 50) இவர் அரூர் பேருந்து நிலையத்தில் வளையல் கடை நடத்தி வருகிறார். பூங்கொடியின் மூத்த மகள் மகா (வயது 29)இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர்ரை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு நித்திஷ் (வயது 9) சாய் ஸ்ரீ (வயது 5) என்று இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகா தனது அம்மா வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 15.11.25- தேதி அன்று மகாவின் கணவர் அரூரில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டு இன்று இன்று காலை 7 மணிக்கு அரூர் வந்துள்ளனர். எட்டு முப்பது மணி அளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் வீட்டில் இருந்த மகாவின் பாட்டி (வயது 70) இருவரையும் சமாதானம் செய்து கேட்காததால், பாட்டி லட்சுமி அவரது மகள் பூங்கொடியையே அழைத்து வர அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது இருவரும் கைகலப்பு ஏற்பட்டு வெங்கடேசன் கத்தியால் மகாவை கழுத்து மற்றும் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த மகாவுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் காலை 9 மணி அளவில் மகாவின் அம்மா பூங்கொடி மற்றும் மகாவின் பாட்டி லட்சுமி வீட்டில் வந்து பார்த்த போது மகா சம்பவ இடத்திலேயே ரத்த காயத்துடன் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.  மேற்படி கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பு ராமமூர்த்தி மற்றும் அரூர் காவல் ஆய்வாளர் செந்தில் ராஜமோகன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகா உடல் பிரேத பரிசோதனைக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.