மனைவியை அடித்து கொன்றுவிட்டு பிணத்துடன் தூங்கிய சைக்கோ கணவர்! தவிக்கும் குழந்தைகள்
போரூர் அருகே நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
போரூர் ஆர்.இ நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி ரோசி ஹவுஸ் கிப்பிங் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 9வயதில் 3ம் வகுப்பு படித்து வரூம் சூர்யா என்ற மகனும், 7ழயதில் 2ம் வகுப்பு படித்து வரும் நித்யா என்கிற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ரோசி நேற்று முன்தினம் மூச்சு பேச்சு இல்லாமல் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். தாய் தூங்குகிறார் என நினைத்த பிள்ளைகள் இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் விளையாட சென்றுவிட்டனர். பின்னர் அருகில் உள்ள தாயின் சகோதரி வீட்டிற்கு சென்று தாய், தந்தை இடையே இரவு தகராறு ஏற்பட்ட விபரத்தை கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த அவர், விரைந்து சென்று மயங்கி கிடந்த ரோசியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார. அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ரோசி ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது. இதுபற்றி போரூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் விரைந்து சென்று ரோசியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ரோசியை அடித்து கொலை செய்துவிட்டு சத்யராஜ் தப்பியது தெரியவந்தது. இதற்கிடையில் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்த சத்யராஜை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சத்யராஜ்க்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு, தினசரி வேலை முடிந்து மதுபோதையில் வீட்டிற்கு வரும் அவர், மனைவி ரோசியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு மதுபோதையில் வீடு திரும்பிய சத்யராஜ் வழக்கம் போல மனைவியுடன் ரகளையில் ஈடுபட்டார். அப்போது திடீரென ரோசியின் தலையை பிடித்து சுவற்றில் மோதியபடி ஆக்ரோஷமாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவர் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் இரவு முழுவதும் மனைவியின் பிணத்துடனேயே தங்கி இருந்த சத்யராஜ் காலையில் வேலைக்கு செல்வது போல தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.