×

மனைவியின் காதலனை சரமாரியாக வெட்டி தள்ளி விட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை 
 

 

மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் சரமாரியாக வெட்டி தள்ளி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் கணவர்.  நெல்லை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்.  42 வயதான இந்த வாலிபர் வெளிநாட்டில் வேலை செய்து வந்திருக்கிறார். மனைவி குழந்தைகள் மட்டும் கூடங்குளத்தில் வசித்து வந்திருக்கிறார்கள்.   செந்தில் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தவர் கிருபாகரன்.  அவரும் 42 வயதான வாலிபர் தான்.  செந்திலுக்கு நண்பர். திருமணமாகி அவருக்கு மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள். 

 செந்தில் வெளிநாட்டில் இருந்த போது அவரின் குடும்பத்திற்கு கிருபாகரன் தான் உதவிகள் செய்து வந்திருக்கிறார்.  இதில்  செந்திலின் மனைவிக்கும் கிருபாகரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் இது கள்ள உறவாக மாறி இருக்கிறது.  இது செந்திலின் காதுக்கு வர மனைவியை கடுமையாக கண்டித்து இருக்கிறார்.  இதனால் கணவர் செந்தில் உடன் சண்டை போட்டுக் கொண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கன்னியாகுமரியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கிறார் செந்திலின் மனைவி.

 இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து இருக்கிறார் செந்தில்.  இத்தனைக்கு காரணம் கிருபாகரன் தானே என்று அவர் மீது ஆத்திரத்தில் இருந்தவர்,  அரிவாளை எடுத்து கிருபாகரனை சரமாரியாக வெட்டி இருக்கிறார்.  இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருபாகரனை அப்பகுதியின் மீட்டு நாகர்கோவில் மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள்.

 கிருபாகரன் உயிரிழந்து விடுவார் என்று நினைத்து வேதனைப்பட்ட செந்தில்,  கூடங்குளத்தில் இருக்கும் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  இது குறித்து அறிந்த போலீசார் செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.