×

ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்து தப்பி ஓடிய ஊர்க்காவல் படை வீரர் 

 

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் அருகே ஐந்து மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் அருகேகாதலர்களான சோமசுந்தரம் (28) மற்றும் சோனியா (28) இருவரும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் சோனியா 5 மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். ஊர்க்காவல் படை வீரரான சோமசுந்தரம், குடும்ப தகராறில் சோனியாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.  சோனியாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.