பேத்தியை பலாத்காரம் செய்த இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய பாட்டி
கரூர் மாவட்டம் குளித்தலையில் பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பாட்டி அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் மாணிக்கம். கட்டிட தொழிலாளியான மாணிக்கம், சிறுமியை பாட்டி வீட்டில் விடுவதாக கூறி, தனது வீட்டுக்கு அழைத்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணிக்கம் பாலியல் ரீதியாக அத்துமீறியது குறித்து தனது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார் 3 வயது சிறுமி. தனது பேத்தி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி அரிவாளுடன் மாணிக்கத்தை தேடி வந்துள்ளார். அப்போது கட்டட வேலை செய்து கொண்டிருந்த மாணிக்கத்தை சிறுமியின் பாட்டி, நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை தடுத்து அரிவாளை வாங்கியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் மாணிக்கட்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து மூதாட்டியிடம் விசாரணை நடத்திவருகின்றனர். பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பாட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.