×

“மெஸேஜ் பண்ணுங்க மசாஜ் பன்றோம்” -சபலப்பட்ட சைன்டிஸ்டுக்கு நேர்ந்த நிலை..

ஒரு அரசாங்க விஞ்ஞானியொருவர் இணையத்தளத்தில் வந்த மசாஜ் விளம்பரத்தினை பார்த்து, சபலப்பட்டு போனபோது அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் 45 வயதான ஒரு அரசாங்க விஞ்ஞானியொருவர் இணையத்தளத்தில் கடந்த வாரம் மனைவிக்கு தெரியாமல் ஒரு ‘மெசேஜ் அனுப்பினால் மசாஜ் பன்றோம் “னு வந்த விளம்பரத்தை பார்த்து அவர்களோடு தொடர்பு கொண்டு பேசினார் .அப்போது அந்த மறுமுனையில் பேசிய சிலர் அழகிய பெண்களின் உதவியுடன் அங்குள்ள ஒரு ஹோட்டலில்
 

ஒரு அரசாங்க விஞ்ஞானியொருவர் இணையத்தளத்தில் வந்த மசாஜ் விளம்பரத்தினை பார்த்து, சபலப்பட்டு போனபோது அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் 45 வயதான ஒரு அரசாங்க விஞ்ஞானியொருவர் இணையத்தளத்தில் கடந்த வாரம் மனைவிக்கு தெரியாமல் ஒரு ‘மெசேஜ் அனுப்பினால் மசாஜ் பன்றோம் “னு வந்த விளம்பரத்தை பார்த்து அவர்களோடு தொடர்பு கொண்டு பேசினார் .அப்போது அந்த மறுமுனையில் பேசிய சிலர் அழகிய பெண்களின் உதவியுடன் அங்குள்ள ஒரு ஹோட்டலில் மசாஜ் என்ற போர்வையில் பலான விஷயங்கள் கிடைக்குமென்றும் ,பணத்தோடு வருமாறும் ,தங்களுக்கு அழகிய பெண்கள் அந்த ஹொட்டல் வாசலில் காத்துகொண்டிருப்பார்களென்றும் கூறியதால் சபலப்பட சைன்டிஸ்ட் அங்கு போக முடிவு செய்தார் .
இதனால் தன்னுடைய மனைவியிடம் நண்பரை பார்க்க போவதாகக்கூறிவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த ஹோட்டலுக்கு போனார் .அப்போது அந்த ஹோட்டல் வாசலிலிருந்து ஒருவர் அவரை அந்த ஹோட்டலுக்குள் அழைத்து சென்று கட்டி போட்டார்கள் ,அப்போது இன்னும் சில பெண்களும் அங்கு வந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள் .
பிறகு அவரின் வீட்டிற்கு போன் செய்து உங்களின் புருஷனை உயிரோடு மீட்க உடனே 10லட்சம் ரூபாய் பணதுடன் அந்த குறிப்பிட்ட ஹோட்டலுக்கு வரச்சொல்லி மிரட்டினார்கள் .உடனே அந்த சைன்டிஸ்ட்டின் மனைவி போலீசில் புகாரளித்தார் .போலீசார் அந்த ஹொட்டலுக்குள் அதிரடியாக நுழைந்து அவரின் கணவர் சைன்டிஸ்டை மீட்டு இந்த மோசடி வேலை செய்த தீபக் குமார், சுனிதா குர்ஜார் மற்றும் ராகேஷ் குமார் ஆகியோரையும் ஒரு பெண்ணையும் கைது செய்தார்கள் .