☰
×


அரசுப்பள்ளி ஆசிரியர் கழுத்தறுத்துக் கொலை

 

அரியலூர் மாவட்டம், பெரிய திருகோணம் பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் புகழேந்தி (50) என்பவரை மணிகண்டன் (35), சிவசூரியா (30), நவநீத கிருஷ்ணன் ஆகிய மூவர் துரத்திச் சென்று கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் பெரிய திருகோணத்தை சேர்ந்தவர் புகழேந்தி (50). அரியலூர் அடுத்த கல்ல கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரியம்மாபாளையம் சாலையில் உள்ள தனது உறவினர் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கோழி பண்ணைக்கு அடிக்கடி வருவது வழக்கம். அதுபோல் புகழேந்தி நேற்று கோழிப்பண்ணைக்கு சென்றார். அப்போது ராதாகிருஷ்ணன் இல்லை. இந்நிலையில் நேற்று மாலை கோழி பண்ணையில் புகழேந்தி கழுத்து அறுக்கப்பட்டு, இடது கையில் வெட்டு காயத் துடன் கொலை செய்யப் பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குன்னம் போலீசார் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசா ரணையில், குன்னத்தை சேர்ந்த சுந்தரம் மகன் மணி கண்டன் (35), ஜெயராமன் மகன் சிவசூரியா(30), மற் றும் அரியலூரை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் ஆகிய 3 பேர் புகழேந்தியை நேற்று மாலை கோழி பண்ணையில் துரத்தியதை பார்த்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். கொலை செய்யப்பட்ட அதன்பேரில் மணிகண் டன் உள்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாகதேடி வருகின்றனர். அவர்களை பிடித்த பின்னரே புகழேந்தி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார்  தெரிவித்தனர். தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.