×

கள்ளக்காதலியை தேடி சென்ற போலீசை வெட்டிய கும்பல்

 

கள்ளக்காதலியை தேடி சென்ற இடத்தில் பேரையூர் சார்பு ஆய்வாளருக்கு தலை மற்றும் முகத்தில் வெட்டு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முருகன் (54). நேற்று (25.9.25) முருகன் விடுமுறையில் இருந்த போது இரவு 10 மணியளவில் முருகன் சாதாரண உடையில் பேரையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட உப்பங்குளம் என்ற கிராமம் அருகே சென்ற போது இரண்டு பேர் முகத்தில் வெட்டி உள்ளனர். இதனையடுத்து முருகன் முதுகுளத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தலையில் 3 தையல், முகத்தில் 8 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு பெண்ணுடன் உள்ள கள்ள தொடர்பு காரணமாக பெண்ணின் உறவினர்கள் செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். 

உப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண் மாரீஸ்வரி(38), இவரது கணவர் மாரிமுத்து. மாரீஸ்வரி மற்றும் அவரது கணவருக்கிடையே கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சண்டை ஏற்பட்டு screw drivar- ஆல் மாரீஸ்வரியை கணவர் தாக்கியுள்ளார். இதன் விசாரணை பேரையூர் காவல் நிலையத்தில் நடந்த போது மாரீஸ்வரிக்கும், சார்பு ஆய்வாளர் முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மாரீஸ்வரிக்கும் சின்ன ஆணையூரை சேர்ந்த அலெக்ஸ் என்ற நபருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று நடந்த சம்பவம் கணவர் மாரிமுத்தால் நடைபெற்றதா அல்லது கள்ளக்காதலன் அலெக்சால் நடைபெற்றதா என்று பேரையூர் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து முருகன் பேரையூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை, முதுகுளத்தூரிலோ அல்லது மதுரையிலோ
புகார் அளிக்க வில்லை.