×

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

 

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அர்சிகெரே தாலுக்காவில் உள்ள பசவனஹட்டி கிராமத்த்தை சேர்ந்தவர் 34 வயதான மோகன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகும் நிலயில், 2 குழந்தைகள் உள்ளனர். மோகன் இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அதில் இஞ்சி பயிரிட்டு விவசாய தொழில் செய்துவந்தார். இந்நிலையில் ஜெயலட்சுமி, தனஞ்சயமூர்த்தி என்பவருடன் கள்ள உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோகன் ஜெயலட்சுமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த ஜெயலட்சுமி, தனஞ்சயமூர்த்தி, ஜெகதீஷ் மற்றும் புட்டராஜு ஆகியோரை அணுகி, மோகனை கொலை செய்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் தருவதாகக் கூறியதாகத் தெரிகிறது. செப்டம்பர் 2 ஆம் தேதி முதற்கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் ரவி மற்றும் மஞ்சு என அடையாளம் காணப்பட்ட மேலும் இரண்டு நபர்களுடன் மோகன் இருந்ததால் அது தோல்வியடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு இரண்டாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோகன் இஞ்சிப் பயிருக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காகத் தனது வயலுக்குச் சென்றிருந்ததாகவும், அப்போது ஜெயலட்சுமி தனது கணவரின் இருப்பிடம் குறித்து தனஞ்சயமூர்த்திக்கு தொலைபேசியில் தெரிவித்ததாகவும் காவல்துறை குற்றம் சாட்டுகிறது. 

ஜெகதீஷ் வயலுக்கு வந்து மோகனுடன் அமர்ந்திருக்க,  தனஞ்சயமூர்த்தி இரும்புக் கம்பியால் அவரைப் பின்னாலிருந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மோகன் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. பின்னர் தனஞ்சயமூர்த்தி, ஜெயலட்சுமியிடம் கொலை குறித்துத் தெரிவித்ததாகவும், முன்பணமாக ரூ10,000 அனுப்பப்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஜெயலட்சுமி ஆரம்பத்தில் கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாதது போல் போலீசாரிடம் நடித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்கள், இந்தக் கொலைச் சதித்திட்டத்தைக் காவல்துறை கண்டறிந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயலட்சுமி, தனஞ்சயமூர்த்தி, ஜெகதீஷ் மற்றும் புட்டராஜு ஆகியோரை காண்ட்ஸி காவல்துறை கைது செய்துள்ளது.