×

இப்படியெல்லாம் மறைத்தா வெளிநாட்டு பணத்தைக் கடத்துவது?

கொரோனா லாக்டெளன் காலத்தில் ஏராளமான கடத்தல்கள் அதிகரித்து விட்டன. குறிப்பாக தங்கம் கடத்தி வருவது அதிகமாகி விட்டன. ஏனெனில், தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து வருவதும் இதற்கு முக்கியக் காரணம். இப்படி அதிக கேஸ்கள் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவதும் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகின்றன. தற்போது சிக்கியிருக்கும் ஒரு வழக்கு, தங்கம் கடத்தியது அல்ல. வெளிநாட்டு கரன்சிகளைச் சட்டத்திற்கு புறம்பாகக் கடத்தி வந்தவர்கள் சிக்கிய வழக்கு. சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில்,
 

கொரோனா லாக்டெளன் காலத்தில் ஏராளமான கடத்தல்கள் அதிகரித்து விட்டன. குறிப்பாக தங்கம் கடத்தி வருவது அதிகமாகி விட்டன. ஏனெனில், தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து வருவதும் இதற்கு முக்கியக் காரணம். இப்படி அதிக கேஸ்கள் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவதும் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகின்றன.

தற்போது சிக்கியிருக்கும் ஒரு வழக்கு, தங்கம் கடத்தியது அல்ல. வெளிநாட்டு கரன்சிகளைச் சட்டத்திற்கு புறம்பாகக் கடத்தி வந்தவர்கள் சிக்கிய வழக்கு.

சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.7.78 இலட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு உரியதாக இருந்தது. எனவே, அவரிடம் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரது லேப்டாப் பை மற்றும் பார்சலில் 6,600 யூரோக்கள், 2000 இங்கிலாந்து பவுண்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.7.78 இலட்சம். இப்படியெல்லாம் மறைத்தா வெளிநாட்டு கரன்சியை கடத்துவீர்கள் என அதிர்ந்தனர்.

சென்ற வாரத்தில்தான் மலப்புழையில் தங்கத்தை மறைத்து கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் கடத்தி வந்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்து, போதை பொருள் கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டு அது தடுத்து நிறுத்தப்பட்டது. தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி கடத்துவது அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையைப் பலப்படுத்தி வருகின்றன.