×

துணிக்குள் மறைத்து வெளிநாட்டு கரன்சி பார்சல் – இருவர் கைது

சமீபமாக காலமாக வெளிநாட்டுக்கு விமானப் போக்குவரத்து முறையாக இல்லை. காரணம் கொரோனா நோய்த் தொற்றுதான். அதனால், கடத்தல்காரர்கள் பார்சலில் அனுப்பத் தொடங்கி விட்டார்கள். அப்படியான பார்சல்கள் கைப்பற்றப்பட்டன. சென்னை சர்வதேச விமானநிலையக் கொரியர் முனையத்தில், சிங்கப்பூருக்கு அனுப்பப்படவிருந்த மூன்று கொரியர் பார்சல்கள் பிரித்துப் பார்க்கப்பட்டன. ஒவ்வொரு பார்சலிலும், தலா 15 சேலைகள், சால்வைகள் போன்றவை வீதம் இரண்டு பார்சல்களில் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அவை சந்தேகத்தின் பேரில், பிரித்துப் பார்க்கப்பட்ட போது, தெரிவித்தபடி அதில் சேலைகள் இருப்பது தெரியவந்தது.
 

சமீபமாக காலமாக வெளிநாட்டுக்கு விமானப் போக்குவரத்து முறையாக இல்லை. காரணம் கொரோனா நோய்த் தொற்றுதான். அதனால், கடத்தல்காரர்கள் பார்சலில் அனுப்பத் தொடங்கி விட்டார்கள். அப்படியான பார்சல்கள் கைப்பற்றப்பட்டன.

சென்னை சர்வதேச விமானநிலையக் கொரியர் முனையத்தில், சிங்கப்பூருக்கு அனுப்பப்படவிருந்த மூன்று கொரியர் பார்சல்கள் பிரித்துப் பார்க்கப்பட்டன.

ஒவ்வொரு பார்சலிலும், தலா 15 சேலைகள், சால்வைகள் போன்றவை வீதம் இரண்டு பார்சல்களில் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அவை சந்தேகத்தின் பேரில், பிரித்துப் பார்க்கப்பட்ட போது, தெரிவித்தபடி அதில் சேலைகள் இருப்பது தெரியவந்தது.

ஆனால், 5 சேலைகளின் மடிப்புகளுக்குள் வெண்மை நிறக் கவர்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கவர்களைப் பிரித்துப் பார்த்தபோது, ஒவ்வொன்றிலும் 10,000 அமெரிக்க டாலர் நோட்டு இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில், ரூ.37 லட்சம் பெறுமான மொத்தம் 50,000 டாலர் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு அட்டைப் பெட்டியைப் பிரித்த போது, அதிலும், கூறியிருந்தபடி சேலைகள் இருந்தன. அதில் 5 சேலைகளின் மடிப்புகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெள்ளை கவர்களில் 1,86,000 சவூதி அரேபிய ரியால்களும், 5-வது கவரில் 4000 யூரோ, 25000 சுவிஸ் பிராங்க், 18000 சிங்கப்பூர் டாலர் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வெளிநாட்டுக் கரன்சிகளின் மதிப்பு 69.5 லட்சம் ரூபாயாகும். மொத்தம் ரூ.1.06 கோடி மதிப்பிலான கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடைசிப் பார்சலில் சட்டைகள், லெக்கிங்ஸ் இருப்பதாகக் கூறப்பட்டது. அதை திறந்து பார்த்த போது, 15 சட்டைகளின் மடிப்புகளுக்குள் மறைத்து வைக்கப்படிருந்த வெள்ளை கவர்களில், 2000 ரூபாய் நோட்டுகள் கொண்ட தலா ரூ. 2 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், ரூ.30 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புகைப்படத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்ட, சென்னையைச் சேர்ந்த இரண்டு பேரின் பெயர்களில் இந்த பார்சல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மொத்தம் ரூ.1.36 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மற்றும் இந்தியக் கரன்சி நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.