×

மாணவியை கத்தியால் தாக்கி பாலியல் வன்கொடுமை! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

 

கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறில் மாணவியை கத்தியால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறில் மாணவியை கத்தியால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறு தொடர்பான வழக்கை வாபஸ் பெறக் கோரி 4 பேர் கொண்ட கும்பல் மாணவியை கத்தியால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. நிலத்தகராறில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது தாத்தா வீட்டில் மாணவி இருந்தபோது 9 பேர் கொண்ட கும்பல், வழ்க்கை வாபஸ் பெறக்கூறி மிரட்டிவருவதாகவும்,  புகார் அளித்தும் 10 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தங்களை மிரட்டுவதாக மாணவியின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.