×

வங்கி ஊழியரைத் தாக்கிய போலீஸ்காரர்… உடனடியாக நடவடிக்கை எடுத்த நிர்மலா சீதாராமன்!

சூரத்தில் வங்கியில் வேலை செய்யும் பெண் ஒருவரை போலீஸ்காரர் அடித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சூரத் நகரின் கனரா வங்கி சரோலி கிளையில் நடந்ததுள்ளது. இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. Bankers r working tirelessly amid lockdown & Covid19 spread but still facing wrath of common people & authorities as well. They lady who was assalted
 

சூரத்தில் வங்கியில் வேலை செய்யும் பெண் ஒருவரை போலீஸ்காரர் அடித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சூரத் நகரின் கனரா வங்கி சரோலி கிளையில் நடந்ததுள்ளது. இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

பின்னர் அந்த காவலர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்திற்குச் சென்றுள்ளது. இது குறித்துப் பதிவிட்ட நிர்மலா சீதாராமன் “ஒரு வங்கி வளாகத்தில் பெண் ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சூரத்தின் கலெக்டர் தவல் படேலிடம் பேசியுள்ளேன். தற்போது அவர் விடுப்பில் இருந்தாலும், நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் மீது சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எனக்கு உறுதியளித்தார்.

“வங்கிகளில் உள்ள அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். சவால்களுக்கு மத்தியில்,மக்களுக்காக சேவை செய்து வரும் வங்கி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையைப் பாதுகாப்பது எங்கள் கடமை” என்றும் தெரிவித்துள்ளார்.

“எனது அலுவலகத்திலிருந்து போலீஸ் கமிஷனர் ஸ்ரீ. பிரம்பட்டிடம் பேசப்பட்டுள்ளது. அவரே அந்தக் கிளைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார் என்று அவர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவார் ” என்றும் தெரிவித்துள்ளார்.