6 வயது மகனை கிணற்றில் வீசிய தந்தை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் கணவன் - மனைவி பிரச்னையில் குடிபோதையில் 6 வயது மகன் சஞ்சயை கிணற்றில் தூக்கி எறிந்து கொன்ற தந்தை செல்வராஜ் கைது செய்யப்பட்டார்.
செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவரது மனைவி தேவி (35). இந்தத் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் மற்றும் 6 வயதில் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருந்தான். செல்வராஜ் மற்றும் தேவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கடன் வாங்கிய பணத்தை செலவு செய்தது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த வாக்குவாதம் இன்று காலை வரையிலும் நீடித்தது.
குடும்பத் தகராறூ முற்றியதில் செல்வராஜ், ஆத்திரத்தில் தனது 6 வயது மகன் சஞ்சயை கிணற்றில்வீசினார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனை மீட்பதற்காக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சிறுவனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைகக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு செல்வராஜ்-யை கைது செய்தனர்.