×

ஒரு அப்பா, மகன் சேர்ந்து பண்ண வேலைய பாருங்க! -1.5கோடி போதை பொருளை கடத்தியபோது பிடிபட்டனர் .

நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளும், மியான்மர் பகுதிகளும் சீல் வைக்கப்பட்டிருந்தாலும், போதைப்பொருள் கடத்தல் தடையின்றி தொடர்ந்தன என்பதற்கு இந்த சம்பவங்களே சான்று . மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள மிசோரத்தின் ஹன்தியால் மாவட்டத்தில் அமன் என்ற 62 வயது நபரும் அவரின் மகனும் அந்த பகுதியில் பல்லாண்டுகளாக போதை பொருள் கடத்தல் தொழிலை ஏதோ மளிகை கடை நடத்துவதை போல நடத்தி வந்தனர் . கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவர்கள் 1.9கிலோ எடையுள்ள, சுமார்
 

நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளும், மியான்மர் பகுதிகளும் சீல் வைக்கப்பட்டிருந்தாலும், போதைப்பொருள் கடத்தல் தடையின்றி தொடர்ந்தன என்பதற்கு இந்த சம்பவங்களே சான்று .
மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள மிசோரத்தின் ஹன்தியால் மாவட்டத்தில் அமன் என்ற 62 வயது நபரும் அவரின் மகனும் அந்த பகுதியில் பல்லாண்டுகளாக போதை பொருள் கடத்தல் தொழிலை ஏதோ மளிகை கடை நடத்துவதை போல நடத்தி வந்தனர் .


கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவர்கள் 1.9கிலோ எடையுள்ள, சுமார் 1.54 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை கடத்தி வரும்போது போலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர் .
இதே போல அவர்களின் கூட்டத்தை சேர்ந்த துஹ்கிமா (62) மற்றும் அவரது மகன் ரெம்தங்பூயா (33) ஆகியோர் போதைப்பொருட்களுடன் வெள்ளிக்கிழமை இரவு நகார்சிப் கிராமத்தில் கைது செய்யப்பட்டனர் . அவர்கள் ஒரு ஆற்றின் குறுக்கே நீந்தி ,ரூ .15 லட்சம் மதிப்புள்ள சுமார் 280 கிராம் ஹெராயினை கடத்திக்கொண்டு போனபோது அவர்கள் போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்றனர் .அப்போது போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்


இந்த போதை பொருள் பறிமுதல் சமீபத்தில் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை என்று போலீசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரின் மீது போதைப்பொருள் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.