×

“கண்ணீரை துடைப்பது போல வந்து கண்டபடி கட்டிப்பிடித்தார்”-மாமனார் மீது மருமகள் புகார்

ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த சண்டைக்கு குறுக்கே வந்த அந்த பெண்ணின் மாமனார் அந்த மருமகளை கட்டிப்பிடித்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் மலாட் நகரைச் சேர்ந்த ஒரு 31 வயது பெண் அங்குள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டார் .அந்த வீட்டில் மேல் தளத்தில் அவரும் அவரின் கணவரும் வசித்தார்கள் .அந்த வீட்டின் கீழ் தளத்தில் அவரின் மாமனார் வசித்து வந்தார் .இதற்கிடையே அந்த கணவன் மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு
 

ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நடந்த சண்டைக்கு குறுக்கே வந்த  அந்த பெண்ணின் மாமனார் அந்த மருமகளை கட்டிப்பிடித்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது 

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் மலாட் நகரைச் சேர்ந்த ஒரு 31 வயது பெண் அங்குள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டார் .அந்த வீட்டில் மேல் தளத்தில் அவரும் அவரின் கணவரும் வசித்தார்கள் .அந்த  வீட்டின் கீழ் தளத்தில் அவரின் மாமனார் வசித்து வந்தார் .இதற்கிடையே அந்த கணவன் மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு நடப்பது வழக்கம் .பின்னர் தானாகவே சரியாகி விடும் .

இந்த வார தொடக்கத்தில் அவருக்கும் அவரின் கணவருக்கும் மீண்டும்  சண்டை வந்துள்ளது .அந்த சண்டை காரணமாக அவரின் கணவர் வீட்டை விட்டு வெளியே போய் விட்டார் .இதை பார்த்து கொண்டிருந்த அவரின் மாமனார் மெல்ல படியேறி மாடிக்கு போனார் .அங்கு தனியாக சோகமாக இருந்த மருமகளிடம் ஆதரவாக பேசுவது போல நடித்தார் .பின்னர் அவருக்கு ஆறுதல் சொல்வது போல  அவரின் மருமகளை தொட்டு கட்டியனைத்தார்  .மாமனாரின் இந்த செய்கையை சற்றும் எதிர் பார்க்காத அந்த பெண் அவரின் கையை பிடித்து தரதரவென சாலைக்கு இழுத்து சென்றார் .இவர்களின் தகராறை பார்த்து ஊரே கூடிவிட்டது .அப்போது அந்த மருமகள் எல்லோர் முன்னிலையில் இவர் செய்த வேலையை எடுத்து கூறினார் .அப்போது யாரும் எதிர்பாராவிதமாக அந்த மாமனார் ஒரு தடியை எடுத்து பொது  மக்களை தாக்க தொடங்கினார் .

உடனே போலீசில் மாமனார் மீது அந்த மருமகளும் அவரின் மகனும்  புகார் தெரிவித்தார்கள்  .போலீசார் விரைந்து வந்து  அந்த மாமனாரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு  செய்தார்கள்