×

சேலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து கொலை! காட்டில் உடல் மட்டும் கிடக்கும் அதிர்ச்சி

 

சேலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து கொலை! காட்டில் உடல் மட்டும் கிடக்கும் அதிர்ச்சிசேலம் அருகே காட்டுப்பகுதிக்குள் பிரபல ரவுடியை தலையை துண்டித்து  கொலை செய்து உடலை மட்டும் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே கே.கே. நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஐயப்பன் என்பவருடைய மகன் கவுதம்(26).  இவர் மீது  ஐந்துக்கும் மேற்பட்ட  அடிதடி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் தகராறு ஒன்றில்  இவரது   அண்ணன் சிவமூர்த்தியை கட்டையால் அடித்து கொலை செய்தார்.  இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கவுதமனை  போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதாவது  மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில்  காலையும்,  மாலையும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமினில் வெளியே வந்து,  கடந்த மூன்றாம் தேதி கவுதம்,  போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டார்.  அதன் பிறகு வீடு திரும்பவில்லை.  இந்த நிலையில் இரும்பாலை அருகே  உள்ள சித்தனுர் காட்டுப்பகுதியில்,  தலை இல்லாமல் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை ஆடு மேய்க்க சென்றவர்கள்  பார்த்துள்ளனர். இது குறித்து உடனடியாக இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனை அடுத்து காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் சின்ன தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு  சென்று, அங்கு கிடந்த தலை இல்லாத உடலை மீட்டனர். பின்னர்  அவரது சட்டை பையில் இருந்த ஆதார் கார்டை எடுத்து பார்த்தபோது, அது  காணாமல் போன ரவுடி கவுதம் என்பது தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து ரவுடி கவுதமனின்  தலையை,  போலீசார் நேற்று இரவு வரை  தேடினர். தலை கிடைக்காத நிலையில் மீண்டும் இன்று காலை தேடுதலை தொடந்தனர். 

இந்த நிலையில் அதே காட்டுப் பகுதியில் சற்று தொலைவில் தலை வீசிச் சென்றதை கண்டறிந்து, தலையை மீட்டனர்.  உடல் சற்று அழுகிய நிலையில் இருந்ததால், அவர் கடந்த மூன்றாம் தேதி இரவே கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.  அவரை நண்பர்கள் யாராவது அழைத்துச் சென்று தீர்த்துக் கட்டினார்களா?  அல்லது கூலிப்படையினர் தீர்த்த கட்டினார்களா? பழிக்கு பழி வாங்க தீர்த்து கட்டினாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டு பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலையை துண்டித்து ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.