×

"அமெரிக்காவுல செட்டில் ஆகலேன்னா அது அவமானம்" -குறுக்கு வழியில் போன குடும்பத்துக்கு நேர்ந்த கதி 

 


அமேரிக்கா செல்லும் ஆசையில் பனியில் உறைந்து ஒரு குடும்பமே உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது 


குஜராத்திலுள்ள டிங்குஜ  என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் ஒரு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .அவரது மனைவி வைஷாலி பிள்ளைகள் விஹாங்கி மற்றும் தார்மிக்  ஆகியோர் வசதியாக வாழ்ந்து வந்தனர் 
ஜகதீஷ் குடும்பம் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்களாம். அமெரிக்காவில் செட்டில் ஆவது, ஒரு தன்மானப் பிரச்சினையாக அக்கிராமத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது. அதாவது, குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் செட்டில் ஆகவில்லை என்றால், அது குடும்பத்துக்கு அவமானம் என அக்கிராமத்தினர் கருதுகிறார்களாம்.. எப்படியாவது அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிடுவது என புறப்பட்டிருக்கிறது ஜகதீஷ் குடும்பம். 
அதனால் சுமார் 65 இலட்ச ரூபாய் ஏஜண்டுகளுக்குக் கொடுத்து எப்படியாவது அமெரிக்கா செல்ல குறுக்கு வழியில் கனடா சென்று அங்கிருந்து அமேரிக்கா செல்ல புறப்பட்டது  ஜகதீஷ் குடும்பம்.ஆனால், அமெரிக்கா போவவதற்கு பதிலாக கனடா அமெரிக்க எல்லையிலேயே அவர்கள் குடும்பமாக பனியில் உறைந்து உயிர் இழந்துள்ளது இப்போது தெரிய வந்துள்ளது 
அத்துடன், ஜகதீஷ்  கிராமத்திலிருந்து வேறு பலரும், அமெரிக்கா செல்வதற்காக, கனடா சென்று, அங்கிருந்து எல்லையைக் கடந்து நடந்தே அமெரிக்காவுக்கு புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் என்ன ஆனார்கள் என்பதும் இதுவரை தெரியவில்லை.