×

“சமூக விரோதக் கும்பல்களைப் பாதுகாக்கும் எடப்பாடி அரசு ” : செய்தியாளர் கொலைக்கு ஸ்டாலின் கண்டனம்!

தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த சோமங்களம் பழையநல்லூரில் வசித்து வந்தவர் மோசஸ். இவர் தமிழன் தொலைக்காட்சியில் ஸ்ரீபெரும்புதூர் பகுதி செய்தியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பகுதியில் நடந்த ஏரிகள் ஆக்கிரமிப்பு, கஞ்சா விற்பனை குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரை வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்று வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதுதொடர்பாக
 

தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த சோமங்களம் பழையநல்லூரில் வசித்து வந்தவர் மோசஸ். இவர் தமிழன் தொலைக்காட்சியில் ஸ்ரீபெரும்புதூர் பகுதி செய்தியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பகுதியில் நடந்த ஏரிகள் ஆக்கிரமிப்பு, கஞ்சா விற்பனை குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரை வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்று வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் நவமணி என்ற ரவுடியை போலீசார் தேடியோ வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கல் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், “சட்ட விரோதச் செயல்களை வெளிக் கொண்டு வந்ததால் மிரட்டப்பட்ட தனியார் தொலைக்காட்சிச் செய்தியாளர் திரு. மோசஸ், காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நேற்றிரவு வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது! கடும் கண்டனத்திற்குரிய இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை!திரு. மோசஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!சமூக விரோதக் கும்பல்களைப் பாதுகாக்கும் எடப்பாடி அ.தி.மு.க. அரசு, பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது விழும் சம்மட்டி அடி! பத்திரிகைச் சுதந்திரத்திற்கு தி.மு.கழகம் என்றென்றும் துணை நிற்கும்!” என்று கூறியுள்ளார்.