திருமணமான 8 மாதத்தில் வரதட்சணை கொடுமை- கணவனே மனைவியை அடித்துக் கொன்ற கொடூரம்
காதலித்து திருமணம் செய்து 9 மாதங்களில் மூன்றாம் மாதத்தில் இருந்து வரதட்சணை கொடுமை செய்து மனைவியை கொலை செய்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தண்டூர் நகரத்தின் சாய்பூர் பகுதியில் வசிக்கும் அனுஷா (20) மற்றும் பரமேஷ் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் பெற்றோருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்தால் பரமேஷை தான் செய்வேன் என்று அடம்பிடித்து பெற்றோரை சம்மதிக்க வைத்து இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இந்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமான மூன்று மாதங்களிலிருந்தே வரதட்சணை கேட்டு பரமேஷ் அனுஷாவை துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த சூழலில், வரதட்சணை தொடர்பாக நேற்று தம்பதியினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரமேஷ், ஒரு கட்டையால் அனுஷாவை கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் அவர் பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காதல் திருமணமாகத் தொடங்கிய வாழ்க்கை வரதட்சணை தொடர்பான சம்பவத்தில் முடிவடைந்தது குறித்து அப்பகுதி மக்கள் ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்துகின்றனர் . அனுஷா இறந்த தகவலை அறிந்து தலைமறைவான பரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.